மின்சாரம் தாக்கி மேல்நிலை நீர் தொட்டி ஆப்ரேட்டர் இருளப்பு

74பார்த்தது
ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம், புதுமனைப் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (42) இவர் அதே ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கம் போல காலை நேரத்தில் கிராம மக்களுக்கு தண்ணீர் விடுவதற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் வைக்கப்பட்டுள்ள மோட்டாரில் இருந்து சுவிட்ச் பாக்ஸ் செல்லக்கூடிய மின் ஒயர் பழுதாகி இருப்பது தெரியாமல் இன்று காலை தண்ணீர் விடுவதற்காக சுவிட்ச் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி சுகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உமராபாத் போலீசார் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி