கள்ளக்குறிச்சி: ஆட்சியர் சான்றிதழ் வழங்கல்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூளை முடக்குவாதம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய கடுமையாக பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிக்கு அவரது சகோதரரைப் பாதுகாவலராக நியமனம் செய்த தேசிய அறக்கட்டளை சான்றிதழை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உதவித்தொகை, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, காதொலி கருவி, சிறப்பு மொபைல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தேசிய அறக்கட்டளை மூலம் உள்ளூர் குழுமம் உருவாக்கப்பட்டு 18 வயதிற்கு மேற்பட்ட மூளைவளர்ச்சி குன்றிய கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் திட்டத்தின்கீழ் திருக்கோவிலுாரைச் சேர்ந்த சுகந்தி என்பவரது மகன் மோகன்குமார், 30; என்பவருக்கு அவரது சகோதரர் வினோத், 25; என்பவரை பாதுகாவலராக நியமனம் செய்து தேசிய அறக்கட்டளை சான்றிதழை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.