திருக்கோவிலுார் அடுத்த அம்மன்கொல்லைமேடு ஏழுமலை, 45; கூலித்தொழிலாளி. இவர், உளுந்துார்பேட்டை அடுத்த கல்சிறுநாகலுார் சென்றவர் நேற்று முன்தினம் இரவு அம்மன்கொல்லைமேடுக்கு பைக்கில் திரும்பினார். 11: 00 மணியளவில் கல்சிறுநாகலுார்- தையூர் சாலையில் சென்றபோது, பூண்டி அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் ஏழுமலை தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானார். இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.