கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இவ்வழக்கு தொடர்பாக 24 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அவர்களில் அரிமுத்து என்பவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
மீதமுள்ள கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ், இவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், ஷாகுல்அமீது, ராமர், அய்யாசாமி, தெய்வீகன், வேலு உட்பட 23 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் உள்ள 23 பேரையும் நேற்று காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், 23 பேரையும் வரும் 21ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.