கள்ளக்குறிச்சி: கமிட்டியில் ரூ. 16. 30 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 16. 30 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கமிட்டிக்கு, மக்காச்சோளம் 610 மூட்டை, வேர்க்கடலை 30, கம்பு 3, எள் 2, உளுந்து 1 மூட்டை உட்பட 646 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2, 150, வேர்க்கடலை 13, 136, கம்பு 3, 034, எள் 13, 136, உளுந்து 2, 899 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 16 லட்சத்து 30 ஆயிரத்து 603 ரூபாய்க்கு நேற்று வர்த்தகம் நடந்தது. சின்னசேலம் கமிட்டியில் மக்காச்சோளம் 80, வேர்க்கடலை 4 என மொத்தமாக 84 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2, 420, வேர்க்கடலை 7, 100 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 2 லட்சத்து 23 ஆயிரத்து 860 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் கமிட்டியில் மக்காச்சோளம் 110 மூட்டை, நெல் 40, கம்பு 23, தலா 2 மூட்டை எள், உளுந்து, எச். பி. கம்பு, தலா ஒரு மூட்டை திணை, சிவப்பு சோளம் என 181 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஒரு மூட்டை மக்காச்சோளம் 2, 400, நெல் 2, 190, கம்பு 3, 092, எள் 8, 996, உளுந்து 8, 089, எச். பி. கம்பு 2, 289, திணை 2589, சிவப்பு சோளம் 2, 589 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 4 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.