உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் ஊராட்சி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 61; விவசாய கூலித் தொழிலாளி. இவர், 8 மாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று காலை 11: 00 மணியளவில் மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு மேய்ச்சலுகாக ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென ஒவ்வொரு மாடாக மயங்கி விழுந்து மர்மமான முறையில் 5 பசு மாடுகள் இறந்தன.
திருநாவலுார் கால்நடை மருத்துவர்கள் அப்பாஸ், ஷாலினி மற்றும் மருத்துவர்கள் உயிருக்கு போராடிய கன்றுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.