உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், போலீசார் கிரி, யுவராஜ் ஆகியோர் நேற்று எம். எஸ், தக்கா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த இருவரை சந்கேத்தின் பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் , தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்களை கிராமங்களில் உள்ள கடைகளில் விற்று வந்தது தெரியவந்தது. பிடிபட்டவர்கள் உளுந்தூர்பேட்டை எம். எஸ். , தக்கா பகுதியை சேர்ந்த முகமதுஇஸ்மாயில் மகன் சாகுல்ஹமீது, 48; உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த காதர்பாட்ஷா மகன் சலீம், 52; என தெரிய வந்தது.
அதன் பேரில் சாகுல்ஹமீது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது, 35 கிலோ தடை செய்யப்பட ஹான்ஸ் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை போலீசார் சாகுல்ஹமீது, சலீம் ஆகிய இருவரை கைது செய்து ஹான்ஸ் பொருட்களை பறிமுதல் செய்தனர்.