கார்களை திரும்பப் பெறும் ஹோண்டா நிறுவனம்

78பார்த்தது
கார்களை திரும்பப் பெறும் ஹோண்டா நிறுவனம்
ஹோண்டா நிறுவனம் தனது அமேஸ், சிட்டி, BR-V, ஜாஸ், WR-V மற்றும் ப்ரியோ மாடல்களைச் சேர்த்து சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. திரும்பப் பெறப்படும் கார்களின் ஃபியூவல் பம்ப்-இல் கோளாறு இருப்பதாகவும், அதனை ஹோண்டா நிறுவனம் இலவசமாக சரி செய்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. கார்களை திரும்ப பெறப்படும் பணிகள், நவ.5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சந்தேகமுள்ள வாடிக்கையாளர்கள் நிறுவனத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி