உளுந்துார்பேட்டை, வி. கே. எஸ். , கார்டன் அருகே ஒரு வீட்டில், விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருப்பதாக குற்றத் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடன், சம்பவ இடத்திற்குச் சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர். அதில் 100 கிலோ குட்கா வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் பாண்டியன், 31; விற்பனைக்காக வீட்டை வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
உடன், பாண்டியன் மற்றும் 100 கிலோ குட்கா பொருட்களையும் உளுந்துார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பாண்டியன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.