உளுந்தூர்பேட்டை: 5 கார்கள் மோதியதில் 4 பேர் படுகாயம்
உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 5 கார்கள் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இன்டிகா கார் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால், பின்னால் அடுத்தடுத்து வந்த 4 கார்கள் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், கடைசியாக மாருதி ஆல்டோ காரில் வந்த பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அடுத்த சிறுகூடல் பகுதியைச் சேர்ந்த காமராஜ், 45; அவரது மனைவி கலைவாணி, 45; மகன்கள் இருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.