உளுந்தூர்பேட்டை அடுத்த சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சேட்டு, 40; விவசாயியான இவரது நிலத்தில் நேற்று வேர்க்கடலை அறுவடை பணி நடந்தது. இப்பணியில் அஞ்சாமணி 55, ராணி 37, வீரம்மாள் 35, அலமேலு 45 ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. அதனால் நிலத்தில் வேலை செய்த பெண்கள் மலைக்குன்று அருகே ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கியதில், நிலத்தில் கட்டியிருந்த சக்திவேல் என்பவருக்க சொந்தமான பசு மாடு இறந்தது.
மேலும், மலைக்குன்று அருகே ஒதுங்கி நின்ற அஞ்சாமணி, ராணி, வீரம்மாள், அலமேலு ஆகியோர் மயக்கமடைந்தனர். அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.