திமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டணியில் இருப்பதாக தவெக தலைவர் விஜய் கூறியிருப்பதை ஏற்கனவே நாங்கள் சொல்லியிருந்தோம் எனவும் தற்போது இதை எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி ஒன்றில் கூறினார். அவரின் கருத்தை விமர்சித்துள்ள அமைச்சர் ஏ.வ. வேலு, “பழைய பல்லவியை தான் எடப்பாடி பழனிசாமி இன்னும் பாடிக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.