உளுந்துார்பேட்டை நகராட்சியுடன், அருகில் உள்ள காட்டுநெமிலி ஊராட்சி இணைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று காலை 9 மணிக்கு உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் 150க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை உளுந்துார்பேட்டை போலீசார் சமாதானம் செய்ததை ஏற்று 9: 30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதே பிரச்னையை வலியுறுத்தி பாண்டூர் கிராம மக்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.