கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

தி. மலை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் பி. நீலமேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் பேசியதாவது: கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் தொடங்காமல் உள்ள கட்டுமானப் பணிகளை 5. 10. 2024-ஆம் தேதிக்குள் கட்டாயம் தொடங்க வேண்டும். ஊரக குடியிருப்பு பழுது நீக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். வீடுகளின் கட்டுமானத்தில் பயனாளிகளுக்கு கட்டுமானப் பொருள்கள் வழங்குவதை உதவி செயற்பொறியாளா்கள், மண்டல அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். வீடுகள் கட்டும் திட்டத்துக்கு வழங்கப்பட்ட சிமென்ட் குறித்து உரிய பதிவேடுகள் மூலம் உறுதி செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை தினமும் குளோரினேசன் செய்வதுடன் 15 நாள்களுக்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை