
தி.மலை: கார்மேல் ஆலய நூற்றாண்டு நினைவு கல்வாரி ஆலயம் திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில், ஆற்காடு லுத்தரன் திருச்சபை கார்மேல் ஆலயத்தின் நூற்றாண்டு நினைவாக புதிதாக கட்டப்பட்டுள்ள கல்வாரி ஆலயத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதனையொட்டி ஆற்காடு லுதரன் திருச்சபை அருட்திரு முனைவர் பீட்டர் பால் தாமஸ் தலைமையில் சிலுவையை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்து புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சபையை அடைந்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி கலந்துகொண்டு கல்வாரி ஆலயத்தின் கதவை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட கல்வாரி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்ட அவர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் ஏ.எல்.சி. உதவி தலைவர் ஐ. ஜேக்கப், செயலாளர் ஹூபர்ட் தனசுந்தரம், பொருளாளர் ஏ. ஜாஷ்வா பீட்டர், மத்திய நிர்வாகி ஜெ. தெய்வநீதி, சொத்து அதிகாரி ஜி. இயேசுநேசம் பேரின்பதாஸ், ஆயர் ஏ. சாமுவேல், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் ராயல் தியாகு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திருச்சபை மக்கள் கலந்துகொண்டனர்.