தை மாதம் அமாவாசை நாளில் கோயில் குளங்கள், ஆறுகளில் நீராடுவதும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் புண்ணியம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம் என்ற நம்பிக்கை இந்து மதத்தில் உள்ளது. அதன்படி, திருவண்ணாமலையில் இந்திர தீர்த்தம் என்று அழைக்கப்படும் ஐயங்குளம், செங்கம் சாலையில் ரமணஸ்ரம் அருகேயுள்ள குளம் ஆகிய இடங்களில் நேற்று(ஜன 29) அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இவ்விரு இடங்களிலும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தர்ப்பணம் கொடுத்ததுடன், அருகேயுள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.