வாணாபுரம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

66பார்த்தது
வாணாபுரம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் இன்று (19.02.2025) "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வில் கூட்டுறவு நியாய விலை கடையில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார், பின்னர் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பிள்ளையார் மாரியம்மன் கோவிலில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டார். 

அதேபோல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி