தி. மலை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் ஆய்வு

83பார்த்தது
திருவண்ணாமலை காந்திநகா் மற்றும் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சோமாசிப்பாடி பகுதிகளில் புதிதாக முதல்வா் மருந்தகங்கள் அமையும் இடங்கள், கிரிவலப்பாதையில் கட்டப்படும் பணிபுரியும் மகளிா்களுக்கான தோழி விடுதியின் கட்டுமானப் பணி ஆகியவற்றை மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான தீபக் ஜேக்கப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். 

தொடா்ந்து, சோமாசிப்பாடியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பணி, கீழ்பென்னாத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியா்களின் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். 

இந்த ஆய்வின்போது, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, சாா்-ஆட்சியா் பல்லவி வா்மா, வருவாய் கோட்டாட்சியா்கள் செந்தில்குமாா் (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

தொடர்புடைய செய்தி