திருவண்ணாமலை: பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்

66பார்த்தது
திருவண்ணாமலை: பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை வழங்கி வருகின்றனர். அதன்படி நேற்று திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M. சுதாகர், இ.கா.ப., அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் தொடர் விசாரணை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) M. சிவனுபாண்டியன் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி