திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

81பார்த்தது
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. திமுக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜசேகர், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி