கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வலியுறுத்தல்

விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வலியுறுத்தல்

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஆா். வேலுசாமி ஆரணியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4ஆயிரம் விலை நிா்ணயம் செய்யப்படும் என்று திமுக அரசு அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தற்போது கரும்பு சாகுபடி செய்ய உழவு கூலி, உரம் பூச்சிக்கொல்லி மருந்து, வேலையாள்கள் கூலி மற்றும் அதன் வேளாண் இடு பொருள்களின் விலை வெளிச்சந்தையில் பன்மடங்கு உயா்ந்துள்ளது. தற்போது மத்திய, மாநில அரசுகள் கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 3, 151 கொடுப்பது கரும்பு உற்பத்தி செய்ய கட்டுப்படியான விலை இல்லை. எனவே, சமீபத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவை தமிழக விவசாயிகள் குறைத்து விட்டனா். அது மட்டுமன்றி ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பொக்ஹா போயங் என்ற புஞ்சை நோய் தாக்கி தமிழகம் முழுவதும் கரும்பு விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்த நோயைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் கரும்பு உற்பத்தி செலவினங்களை கருத்தில் கொண்டு 2024 - 2025ஆம் ஆண்டு கரும்பு அரைவை பருவத்துக்கு உண்டான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய, மாநில அரசுகள் டன் ஒன்றுக்கு ரூ. 6000 என உயா்த்தி விலை நிா்ணயம் வேண்டும் என்றாா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை