திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், தென்மகாதேவமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பருவதமலையில் மார்கழி மாத பிறப்பு மற்றும் கிரிவலம் 10-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். இதில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். உடன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அரவிந்தன், அதிமுக நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.