தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் நடைபெற்ற மலைவாழ் மக்களின் அவசர மருத்துவ சேவைக்காக அவசரகால மருத்துவ வாகனங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ சேவைகள் தொடக்க விழாவில், பொதுப்பணிகள், கட்டிடங்கள், மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு பேருரையாற்றினார். உடன் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார், பெ.சு. திருசரவணன், ஜோதி கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.