தி.மலை: கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை தடுத்தல் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், காவல் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.