கலசப்பாக்கத்தில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

76பார்த்தது
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்' என வலியுறுத்தி திருவண்ணாமலை மையம் மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கலசப்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகே விடுதலை சிறுத்தைகட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகட்சியின் மாவட்டச் செயலாளர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் வழக்கறிஞர் நாகராசன் கலந்துகொண்டு பேசினார். இந்நிகழ்வின்போது மாநிலத் துணைச் செயலாளர் கு. ராஜகோபால், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த், அன்னக்கிளி பழனிச்சாமி, சுப்பிரமணி மாநில துணை செயலாளர், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வமணி சங்கர், தமிழரசன், ராஜ்குமார், சிவக்குமார், முனுசாமி, ரூபாவதி, பாண்டியன், கோபி ஐயப்பன், ஜெயமூர்த்தி, பாஸ்கரன், ராஜ்குமார், சாமந்தி, பூவழகி, பரணி, பாரதி, காசி செல்வம், சௌந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி