
திருவண்ணாமலை: ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கிடாம்பாளையம் ஊராட்சியில் ரூபாய் 1.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ.சு.தி. சரவணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன், கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி ராஜசேகரன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.