பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலத்தில் நேற்று காலை பிரபல இசையமைப்பாளர் தமன் மற்றும் தெலுங்கு நடிகர் அஸ்வின் ஆகியோர் சாமி தரிசனம் செய்தார்கள்.
இசை அமைப்பாளர் தமன் மற்றும் தெலுங்கு நடிகர் அஸ்வின் ஆகியோர் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்தனர். இதையடுத்து ஆலயத்தின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரியநாயகர் என்று அழைக்கப்படும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தமன் மற்றும் தெலுங்கு நடிகர் அஸ்வினுக்கு ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டு தீப மை பிரசாதம் சிவாச்சாரியார் சங்கர் குருகளால் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வெளியே வந்த இசையமைப்பாளர் தமன் மற்றும் நடிகர் அஸ்வினுடன் அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள்.