கலசபாக்கம் - Kalasapakkam

திருவண்ணாமலை கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தென்மாதிமங்கலம் ஸ்ரீ ஏழுமலையான் மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். உடன் கலசப்பாக்கம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார் மற்றும் மாவட்டப் பிரதிநிதி ராஜசேகர் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை