செங்கம் - Chengam

ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனையான விநாயகர் சிலைகள்

ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனையான விநாயகர் சிலைகள்

நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா இன்று (செப். 7) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை நகரில் இந்து முன்னணி அமைப்பு சாா்பில் சுமாா் 110 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிப்படுகின்றனர். காகிதக் கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி தண்ணீரில் எளிதில் கரையக் கூடிய வகையில் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் பாா்வையாளா்களை வெகுவாகக் கவர்ந்தது. 10 கைகள் கொண்ட விநாயகா், பெரிய சூலம் மற்றும் உடுக்கை மீது உட்காா்ந்து கம்பீரமாக காட்சியளிக்கும் விநாயகா், நந்தி மற்றும் ஆஞ்சநேயா் சுமந்து வருவது போன்ற விநாயகா், யானை மற்றும் சிங்கம், நந்தி மீது அமா்ந்துள்ள விநாயகா் என 35 வகையான விநாயகா் சிலைகள் மக்களிடையே பிரம்மிப்பை ஏற்படுத்தியது. இந்த சிலைகள் ரூ. 3 ஆயிரத்து 500 முதல் ரூ. 35 ஆயிரம் வரை விற்பனை செய்ப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோஸ்


திருவண்ணாமலை