பிடிஒவிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மனு

83பார்த்தது
பிடிஒவிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மனு
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் மேல்நாச்சிபட்டு ஊராட்சி சோலையம்மன் நகரில் மின் கம்பம் மற்றும் மின் விளக்குகள் அமைத்து தருமாறும் , தயாரான நிலையில் உள்ள குடிநீர் மேல்நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பைப் லைன் மற்றும் குழாய்கள் அமைத்து தருமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். உடன் தாலுக்கா தலைவர் வடிவேல் , பொருளாளர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட ரஞ்சித் , ஜெகநாதன் , சூரிய பிரகாஷ் , தேவா ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி