திருவண்ணாமலை: புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை

73பார்த்தது
திருவண்ணாமலை: புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரியகோளாபாடி பகுதி மக்களின் கோரிக்கையான பெரியகோளாபாடி முதல் காட்டு சாலை வரை புதிய தார்ச் சாலை அமைக்கவேண்டும் என்பதாகும். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ மு. பெ. கிரியிடம் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அப்பகுதியில் புதிய தார்ச் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை செய்து பணி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றியச் செயலர் செந்தில்குமார் வரவேற்றார். தொகுதி எம்எல்ஏ மு. பெ. கிரி கலந்து கொண்டு பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார். மேலும், பணியை குறித்த நேரத்தில் தரமாக செய்யவேண்டுமென உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட விவசாய அணித் தலைவர் அருணகிரி, ஒன்றிய துணைச் செயலர் சிவக்குமார், பணி மேற்பார்வையாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி