திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, ஜவ்வாதுமலை ஒன்றியத்திற்குட்பட்ட பலாமரத்தூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 9.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுவிநியோக கடையினை மாவட்ட கழக துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு.பெ. கிரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது, ஒன்றிய கழக செயலாளர் சிவசேமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.