திருவண்ணாமலை: தொண்டு நிறுவனம் சார்பில் கலை நிகழ்ச்சி

62பார்த்தது
திருவண்ணாமலை: தொண்டு நிறுவனம் சார்பில் கலை நிகழ்ச்சி
திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் பொ. சுப்பிரமணி தலைமை வகித்தார். சினம் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ராம. பெருமாள் வரவேற்றார். மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் (பொ) நெ. சரண்யா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கான அரசுத் திட்டங்கள், தொழிற் பயிற்சி, சிறுவயது திருமணங்களை தடுத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்துப் பேசினார். 

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் வீ. முருகானந்தம், திருவண்ணாமலை கிருபாலயா தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் சரளா ஆகியோர் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சியை விளக்கிப் பேசினர். இலக்கு மக்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சினம் தொண்டு நிறுவன பணியாளர்கள் யோகேஸ்வரி, ஜெயப்பிரியா, புஷ்பராஜ், லட்சுமி, ஜானகிராமன், சம்பத், திட்ட மேலாளர் முருகேசன் மற்றும் இலக்கு மக்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி