திருவண்ணாமலை: பொதுமக்களை சந்தித்து பேசிய பாஜக மாவட்ட தலைவர்

56பார்த்தது
திருவண்ணாமலையில் உள்ள மலையடிவாரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்கள் வாழ்வாதாரம் அழிந்துவிடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். அவர்களை, திருவண்ணாமலை மாவட்ட பாஜக தலைவர் பாலசுப்பிரமணியம் நேற்று (ஜன. 24) இரவு நேரில் சென்று சந்தித்து, தமிழக பாஜக கட்சியும், மாநில தலைவர் அண்ணாமலையும் தங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்றும், தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தார். அவருடன் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி