குருநாதம்: சாலையில் விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் தடுப்பு

83பார்த்தது
குருநாதம்: சாலையில் விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் தடுப்பு
சாலையில் விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் தடுப்பு சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை பொங்கலூரில் இருந்து குருநாதம் பாளையம் செல்லும் சாலையில் வரக்குட்டபாளையம் என்ற இடத்தில் குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக சாலை ஓரத்தில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு நாளுக்கு நாள் சரிந்து சாலையின் பக்கம் விழ காத்திருக்கிறது. மேலும் அந்த வழியாக ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயற்பட்டாலும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு சாய்ந்து கிடக்கும் தடுப்புகளை சீர்படுத்தி விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி