சீமான் மீதுநடவடிக்கை எடுக்க பல்லடம் காவல் நிலையத்தில் புகார்

72பார்த்தது
பெரியாரை அவதூறாக பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க பல்லடம் காவல் நிலையத்தில் புகார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படும் ஒப்பற்ற தலைவரான தந்தை பெரியார் குறித்து பொய்யான செய்திகளை கூறி அவதூறு பரப்பும் தீய நோக்கத்தோடு ஊடகங்களில் பேசி வருகின்றார். பெரியார் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், அவர் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்தோடும் தீய எண்ணத்தோடும் அவதூறு பரப்பி வரும் சீமான் மீது தக்க பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட இயக்க தமிழர் பேரவையினர் அதன் பொதுச்செயலாளர் சிற்பி செல்வராஜ் தலைமையில் பல்லடம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி