இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் பிப்.7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கொள்கை கூட்டத்தில் ஜிடிபி வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த 10 முறை ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5% உள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.