திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டம்பாளையத்தில், கடந்த நவம்பர் 29ஆம் தேதி தோட்டத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை பிடிக்காததை கண்டித்து கொடுவாய் பேருந்து நிலையம் அருகே பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அவர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்த சமயத்தில் தமிழக முதல்வர் மத்திய அரசு சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் மாநில அரசின் அனுமதி இன்றி வழக்குகளை விசாரிக்க முடியாதவாறு திரும்பப் பெற்றுவிட்டார். ஆதலால் மூவர் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க முடியாத சூழல் இருப்பதால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு தமிழக முதல்வர் அனுமதிக்க வேண்டும் என அண்ணாமலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினார்.