பல்லடம்: முஸ்லிம் பெண்களுடன் பொங்கல் வைத்த நகர் மன்ற தலைவர்

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் 101 பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். இதில் முஸ்லிம் இன பெண்களும் சமத்துவமாக பொங்கல் வழிபாட்டில் கலந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் பல்லடம் நகராட்சி நகர மன்ற தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தன்னுடைய சார்பில் பொங்கல் வைத்து குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் திமுக நகர மற்றும் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி