திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை வழியாக தினமும் மறையூர் மற்றும் காந்தலூர் மற்றும் மூணாறு பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் மலைவாழ் மக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் சாலை தடுப்புகள் தற்போழுது பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகின்றன. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து சாலை ஓர தடுப்புகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.