திருப்பூர்: அமைச்சரை தகாத வார்த்தையில் திட்டி முகநூல் பதிவு.. போலீசார் விசாரணை
தி. மு. க. , அமைச்சர் மு. பெ. சாமிநாதனை தகாத வார்த்தைகளை கூறி முகநூல் பதிவிட்ட பா. ஜ. க. , பிரமுகர் முகநூல் பதிவுகள் இணையத்தில் வைரல், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு எம். எல். ஏ. , வும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், முத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த தி. மு. க. , ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் அனைத்து அரசு நிகழ்ச்சியையும் நலத்திட்டங்களையும் துவங்கி வைக்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று காங்கேயம் பி. ஜே. பி. , கட்சியை சேர்ந்த சரவணவேல், அவருடைய முகநூலில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதனை மரியாதை குறைவாக தகாத வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட மற்ற கட்சியினரும், பொதுமக்கள் சிலரும் இப்பதிவுகளை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதனை தொடர்ந்து காங்கேயம் தி. மு. க. , கட்சி நிர்வாகிகள் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.