ஸ்ரீ சிவன்மலை ஆண்டவர் கந்த சஷ்டி பக்தர்கள் குழு சார்பில் 2 நாட்கள் அன்னதானம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் தற்போது இந்த திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த கந்தசஷ்டி திருவிழாவில் 7 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சூரசம்காரம் மற்றும் திருகல்யாண உற்சவ நிகழ்வுக்கு பின் விரத முறைப்படி உணவு ஏற்பாடு செய்து அன்னதானம் வழங்க ஸ்ரீ சிவன்மலை ஆண்டவர் கந்த சஷ்டி பக்தர்கள் குழு சார்பில் அறிவித்துள்ளனர். எனவே சிவன்மலை சுப்ரமணிய சுவாமி சன்னிதானத்தில் காப்புக் கட்டி 7 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களின் பெயரை பதிவு செய்து இறைவனின் பரிபூரண திருவருள் பெற கேட்டுக் கொள்வதாக பக்தர்கள் குழு தெரிவித்துள்ளனர். அது சமயம் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளனர்