சிவன்மலையில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்குகிறது

65பார்த்தது
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட சிவன்மலை முருகனை தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று தொடங்குகிறது. இந்த விழா வருகிற 9ம் தேதி வரை நடைபெறுகின்றது. திருவிழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும் திருவீதி உலா காட்சியும் நடைபெறும். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா 7ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. 8ம் தேதி காலையில் அபிஷேக ஆராதனைகளும் மாலை 6 மணியளவில் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாள் 9ஆம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம் நடைபெற்று சுவாமி மலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியின் அருள் பெற வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இரத்தினாம்பாள் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி