காங்கேயம் அடுத்த வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). இவர் தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில் காங்கேயம் திருப்பூர் சாலையில் வாக்கில் மேடு அருகில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் சாலை கடக்க முயன்ற போது காங்கேயத்திலிருந்து திருப்பூர் நோக்கி ஊத்துக்குளியில் தனியார் மில்லில் வேலை பார்க்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (20) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் உயர்ந்ததாக தெரிவித்தனர். இதை எடுத்து காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.