முத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகள், பொது இடங்கள், கோவில் வளாகங்கள், வீதிகள், சாலைகளின் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக ஏடிஎஸ் கொசுப் புழுக்களை அழிப்பதற்கு அபெட் மருந்துகள் தெளிக்கப்பட்டு, கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளோரின் கலக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 15 வார்டுகளிலும் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சுகாதார பணிகளை பேரூராட்சி தலைவர் சுந்தராம்பாள், துணைத் தலைவர் அப்பு, செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.