காங்கேயம் பொத்தியபாளையம், தழுச்சிகாட்டுப்புதூரை சேர்ந்தவர் சுப்புகுட்டி இவரது வீட்டை இரவு பூட்டிவிட்டு முற்றத்தில் தூங்கி உள்ளார். நள்ளிரவு நேரத்தில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவை மர்ம ஆசாமி திறந்து கொண்டு இருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்புகுட்டி திருடன் திருடன் என சத்தம் போட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு ஊர் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதை பார்த்த திருடன் தப்பி பிழைத்தோம் என ஓட்டம் பிடித்தான். பொதுமக்கள் திருடன் சென்ற வழியிலேயே தேடிய பின் திருடன் தப்பிச் சென்று விட்டதாக நினைத்து அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். மறுநாள் காலையில் சுப்புகுட்டி வீட்டின் அருகில் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். அங்கு ஒரு ஆசாமி இருப்பது தெரிய வந்தது. தீயணைப்புதுறைகைகும் காங்கேயம் காவல்துறையினருக்கும் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிற்றின் மூலம் மேலே பத்திரமாக மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 46) என்பதும் முன்தினம் இரவு திருட வந்த இப்போது பொதுமக்கள் துரத்தியதில் ஓடும் போது கிணற்றில் விழுந்ததாக தெரிவித்தான்.