திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 49) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராசாத்தி (40). இவர்களுக்கு கௌசல்யா, பாரதி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். சிவராஜ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மருத்துவமனையில் மனநலம் தொடர்பான சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக உடல் வலிக்கிறது என புலம்பி கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.