தெரு நாய்களை பிடித்த காங்கேயம் நகராட்சி விவசாயிகள் மகிழ்ச்சி
காங்கேயம் அதன் சுற்றுவட்டாரத்தில் சில மாதங்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து கோழி, ஆடு கடித்துக் கொண்று விடுகின்றது. ஆடு வளர்ப்போரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் புகார் மனு கொடுத்தும் இறந்தாடுகளை சாலையில் போட்டு பல்வேறு கட்ட போராட்டம் ஈடுபட்டு வந்தனர். காங்கேயம் நகராட்சி நிர்வாகம் தனியார் அமைப்பான தங்கம் ட்ரஸ்ட் உதவியுடன் காங்கேயம் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க ஈடுபட்டனர். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நாய்களால் பிரச்சனை ஏற்படும் என்ற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்ட பின் தற்போது மாவட்டம் முழுவதும் ஒரே ஒரு தனியார் அமைப்பின் உதவியுடன் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் நாய்களை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நாய்களை பிடித்து கருத்தடை செய்த பின் மீண்டும் அதே இடத்தில் விடுவதால் நாய்களால் ஆடுகள் பலியாவது கட்டுப்படுத்த முடியமா என்ற கேள்வி விவசாயிகளிடம் எழுந்துள்ளது. மேலும் நாய்கள் பிடிக்கப்படுவது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றே சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.