காங்கேயம் அருகே தமிழக தமிழர் நல வாரியத் தலைவரும், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளரும் கார்த்திகேயன் சிவசேனாபதி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் கடித்து ஆடு, மாடு பலியாகி வருகின்றனர் இதற்கு நிரந்தர தீர்வு காண்பதோடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க பரிந்துரைத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை இந்த 6 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 2 லட்சத்து 42, 000 பேர் நாய்க்கடியால் பாதித்துள்ளதாகவும் மேலும் 22 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குறிப்பாக காங்கேயம் பகுதியில் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை இந்த தெரு நாய்களால் தாக்கப்பட்டு ஆடுகள் இறந்து விடுகின்றது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுகின்றது. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையை மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்துக்கு எடுத்துச் சென்றதாகவும் இந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்கும் என்றும் தெரிவித்தார்.