சிவன்மலை கிராமசபை தீர்மானம்-1 கிலோ பிளாஸ்டிக் 1 கிலோ அரிசி

84பார்த்தது
காங்கேயம் சிவன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 1கிலோ பிளாஸ்டிக்  கொடுத்தால் 1கிலோ அரிசி வழங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் தனியார் அமைப்பின் உதவியுடன்  சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். சிவன்மலை இருந்து வெளியேறும் கழிவு நீர்களை சுத்திகரிப்பு செய்து அந்த நீரை வளர்க்கப்படும் மரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.  இதுபோல் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வரும் சிவன்மலை ஊராட்சி மன்றத்தை மாவட்டத்தின் சிறந்த ஊராட்சி என தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் தமிழக அரசால் சிறந்த ஊராட்சி என்ற விருதுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க பட்டுள்ளதாகவும் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ் குமார் தெரிவித்தார்.


தூய்மை மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பாலியல் தொல்லையில் இருந்து காப்பாற்றுவது மற்றும் எய்ட்ஸ், பால்வினை நோய்கள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் கிராம சபை கூட்டத்தில் சிவன்மலை ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இரவு நேரத்தில் தோட்டத்தில் உள்ள ஆடுகளை தாக்கும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்த விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி